தற்போதைய அரசை அசைக்க முடியாது – ஜனாதிபதி

தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சூழ்ச்சிகளால் எதையும் சாதிக்க முடியாது. எவர் இருந்தாலும், எவர் போனாலும் எங்களது ஆட்சி தொடரும், எவர் தவறு செய்தாலும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள், அது எந்தக் கட்சியினராக இருப்பினும் பரவாயில்லை என்றும் அச்சு, இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார்.

மோசமான நிலையிலிருந்து நாட்டையும் மக்களையும் கூட்டு அரசாங்கமே மீட்டதாகவும், நாடு முகம்கொடுத்திருந்த பல்வேறு சவால்களை வெற்றி கொண்டதுடன், நாட்டுக்கும், மக்களுக்கும் பணியை ஆற்றுவதற்காகவும், கூட்டு அரசாங்கத்தின் பயணத்தை பலப்படுத்துவதற்கும், சுதந்திரக் கட்சியையும் தூய்மையான, பலமான அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கும் தாம் பாடுபடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளின்றி செயற்படக்கூடிய அரசியல்வாதிகள் இருக்கும், தூய்மையான அரசியல் இயக்கமே இன்று நாட்டுக்கு தேவை என்றும், அதற்காக, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்டு நாட்டை முதன்மைப்படுத்தி, நாட்டுக்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு