பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணைகள் ஏவப்படும் – வடகொரியா எச்சரிக்கை

ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே என வடகொரியா தெரிவித்துள்ளது.

பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணை ஏவுவதற்கான சமிக்ஞையே இதுவென வடகொரியா கூறியதாக அந்நாட்டு அரச ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துமாறு வடகொரிய இராணுவத்திற்கு அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா முதலான நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என யாருக்கும் அஞ்சாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்த வேண்டுமென வடகொரிய இராணுவ விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு