சைட்டத்திற்கு எதிராக தீப்பற்றிய இரவு

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் மருத்துவபீட மாணவர்களால் நேற்றிரவு தீப்பற்றிய இரவு என்ற போராட்டம் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தலவாக்கலை நகரின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் சைட்டத்துக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமெனக் கோரி தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் 50ற்கும் அதிகமானோர் கோஷங்களை எழுப்பி நேற்றிரவு 7.00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய எதிர்ப்பு போராட்டத்தை நாடாளவிய ரீதியில் முன்னெடுத்தமைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், மருத்துவபீட மாணவர்கள், தொழிற்சங்க பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு