ஜனவரியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இந்த ஆண்டு நடத்த முடியாமல் போகலாமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அதற்கான தேர்தலை நடத்த முடியுமெனத் தெரிவிக்கப்பட்ட போதிலும், டிசம்பர் மாதம் 12ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், 9ஆம் திகதி அரச பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். இதற்கான கோரிக்கையை பரீட்சைகள் ஆணையாளர் தம்மிடம் விடுத்திருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த மாற்றுதினம் இல்லை என்பதால், அடுத்த வருடம் ஜனவரி வரையில் தேர்தலை பிற்போட நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் திருத்த சட்டமூலத்தில் இன்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு