2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகள் நூற்றுக்கு 300 வீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1,000 ஏக்கர் அளவிலான தொழிற்துறை வலயத்தை ஏற்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.