தேசிய பொருளாதார சபை 12ஆம் திகதி கூடவுள்ளது

தாம் நியமித்த தேசிய பொருளாதார சபை எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிற்சி நிலையக் கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திகளுக்கான செயற்றிட்டத்தின் மூலமான 83 மில்லியன் ரூபா செலவில், உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் மூலம் இந்த சேவைக்கால பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டு, பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு