பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை

தெரிவு செய்யப்பட்ட சில வகையான பொலித்தீன் பயன்பாடு இன்று முதல் தடைக்கு வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டமாக இது நடைமுறைக்குவரும் நிலையில், இன்று முதல் பொலித்தீன் தடை செய்யப்படும் என்ற போதிலும், வருகின்ற ஜனவரி மாதம் வரை அதனை நடைமுறைப்படுத்துவதில்லையென அதிகாரிகள் அறிவித்திருப்பதாக பொலிதீன் தயாரிப்பாளர்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலித்தீன் பயன்பாட்டிலிருந்து விடுபடுவதற்காக போதுமானளவு காலம் தேவைப்படுமென உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ள அதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டை தடைசெய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் காலத்திற்கு தேவையானதென களனி பல்கலைக்கழகத்தின் நிலையான தீர்வுகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி யூ.பி.கே. ஏபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு