பாடசாலை மாணவர்களுக்குக் காப்புறுதி

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் சில வாரங்களில் அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இதனூடாக பாடசாலை மாணவர்களுக்கு பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் அறநெறி கல்வியை பயிலும் பௌத்த தேரர்களையும் காப்புறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி நோய் காரணமாக தங்கி சிகிச்சை பெறும் பௌத்த தேரர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா வீதம் 30 நாட்கள் வரை 30,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காப்புறுதி திட்டம் அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு