ஒக்டோபரில் விவசாய வாரம்

ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தை தேசிய விவசாய வாரமாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கரடியனாறு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தை தேசிய விவசாயிகள் வாரமாக பிரகடனப்படுத்துவதுடன், முழு நாடும் ஒன்றிணைந்த விரிவான விவசாய நிகழ்ச்சித்திட்டத்தை அவ்வாரத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களது பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கியத்துவமளித்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு