பொலித்தீன் பாவனை குறித்த வர்த்தமானி

தடிப்பத்தில் 20 மைக்ரோன் அல்லது அதனைவிடக் குறைந்த அளவுடைய பொலித்தீன் அல்லது ஏதேனும் பொலித்தீன் பொருள் பயன்பாடு அல்லது உற்பத்தி போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அவ்வகையான பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல், இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், சில நோக்கங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் எழுத்துமூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்தகடாக்கும் நோக்கத்திற்காக மற்றும் மாற்றீடு இல்லாத நிலையில் மருத்துவ தேவைகளின் போது சில வகையான பொலித்தீன் சார்ந்த பொருட்களை இவ்வாறு எழுத்துமூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு