சுஷ்மா – மாரப்பன சந்திப்பு

இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க இலங்கை விஜயம் செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பு நகரில் இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு இடம்பெற்றுவரும் நிலையில், இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மாரப்பனவுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு