5ஆவது போட்டியிலும் இலங்கைக்குத் தோல்வி

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான 5ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்ற நிலையில், பதிலளித்து ஆடிய இந்திய அணி 46.3 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. விராட் கோலி 110 ஓட்டங்களையும், ஜாதவ் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில், முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

அத்துடன், 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரிலும் 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு