08 ஆண்டுகளுக்கான பொருளாதாரக் கொள்கை தயார்

அடுத்த 08 ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை, இன்று வெளியிடப்படுமென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடவுள்ளதாகவும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள், மெதுவான முறையில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில், அவற்றைத் துரிதப்படுத்துவதற்காக இந்தக் கொள்கைகள் உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஏற்கனவே காணப்படும் பொருளாதாரக் கொள்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக பல கட்டமைப்பு ரீதியான மாற்றங்களும் அறிவிக்கப்படும் எனவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு