சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தை உணர முடிகிறது – இரா.சம்பந்தன்

சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை இவ்விதமாக தொடருவது தங்களுக்கும் எவ்விதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லையென சிங்கள மக்கள் உணர்வதாகவும், இந்த நாடு தற்போதைய நிலையிலிருந்து பொருளாதார ரீதியாக விடுவிக்கப்பட வேண்டுமாயின் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த நாள் நினைவுகளுடான நினைவுப் பேருரையும் இலட்சிய இதயங்களோடு என்னும் கருப்பொருளிலான நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் ஒற்றுமையும் பாதுகாக்க வேண்டும் மற்றும் அது தொடர்பான மக்களுடைய இனரீதியான மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்கள் இணைந்து ஒரு மாநிலமாக மாறவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து மறைந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்கள் என்ன விதமான சேவையினை ஆற்றினார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு