ஊழல் மோசடிகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு

பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களால் நீடிக்குமாறு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் செயலாளர் எச்.டபிள்யூ குணதாச தெரிவித்துள்ளதுடன், அடுத்த வாரமளவில் ஜனாதிபதியின் பதில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாரியளவிலான முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேனவின் தலைமையிலான ஆணைக்குழுவின் ஐந்து நீதிபதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த ஆணைக்குழுவிற்கு 2000ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துடன், அதில் 400 முறைப்பாடுகள் விசாரணைக்காக தெரிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளதுடன், இதில் 17 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 17 பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும்,

ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட மட்டத்திலான செயற்றிட்டங்களின் போது இடம்பெற்ற முறைகேடுகள் உள்ளிட்ட ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு