செவ்வாயில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுமென விஞ்ஞானிகள் தெரிவத்துள்ளனர்.

பூமியிலுள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் மனிதன் கண்டுபிடித்து குடியேறிவிட்ட நிலையில், பூமியை போலவே தட்பவெப்ப நிலை நிலவும் செவ்வாய் கிரகத்தில் மனிதனால் வாழ முடியுமென விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதால், மனிதனை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவதற்கான தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஆனால், செவ்வாய் கிரகத்தில் குடியேறினால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவன் பல்வேறு நோய்த் தாக்குதலுக்காளாகக்கூடும், அங்கு உயிர் வாழ்வது கடினமென ரஷ்ய விஞ்ஞானியான மாஸ்கோவிலுள்ள இயற்பியல் தொழில்நுட்பக் கல்வி மையத்தின் பேராசிரியர் எவ்ஜினி நிகாலோங் தெரிவித்துள்ளார்.

பூமியின் ஈர்ப்பு விசைக்கு அமைவாக மனிதனின் உடல் அமைப்புகள் செயற்படுவதனால், இந்த ஈர்ப்பு விசைக்கு தகுந்தமாதிரி நோய் எதிர்ப்பு சக்திகளும் உடலில் உருவாகின்றன. ஆனால், செவ்வாய் கிரகத்தில் ஈர்ப்பு சக்தி வேறு மாதிரி இருக்கும் என்பதால், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து விடும், இதன்மூலம் பல்வேறு நோய்களைச் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இல்லாமல் உள்ளது, விண்வெளி ஓடத்தில் 06 மாதம் வரை தங்கியிருந்த 18 ரஷ்ய விண்வெளி வீரர்களை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்பட்டதாகவும், அடிக்கடி தடிமன் ஏற்பட்டதுடன், சாதாரண சூழ்நிலையில்கூட நோய் கிருமி தாக்குதலுக்குள்ளானதாகவும், இதேபோன்றுதான், செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் சென்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு