பூமிக்குத் திரும்பினார் பெகி வைட்சன்

உலகச் செய்திகள்

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 665 நாட்களாக கடமையாற்றிய நிலையில் விண்வெளி வீராங்கனை பெகி வைட்சன் பூமிக்கு திரும்பியுள்ளார்.

1996ஆம் ஆண்டு முதல் விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவர், நாஸா நிலையத்தில் பணியாற்றுகிறார். அவருடன் மேலும் இரு உதவியாளர்கள் நேற்று பூமியை வந்தடைந்துள்ளனர்.

பூமியில் இருந்து 250 மைல் உயரத்தில், 10 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் காலத்துக்கு காலம் பல நாட்டு விண்வெளி நிபுணர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில், நாஸாவை சேர்த்த குறித்த விண்வெளி வீராங்கனையும் பணியாற்றியுள்ளார்.

இதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதம் குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 534 நாட்களை கழித்தன் மூலம் அவர், இதற்கு முன்னர் அமெரிக்க விண்வெளியாளரின் சாதனையை முறியடித்துள்ளார்.