ஜனாதிபதிக்கு எதிரான வழக்கைக் கொண்டுநடத்த முடியாது – நீதிமன்றில் எழுத்துமூல அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கை கொண்டு நடத்த முடியாதென சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இது தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்ற போது ஜனாதிபதி சார்பிலான சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி, அதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கான நீதிமன்ற உத்தரவொன்று வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் சிலரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு