தென்கொரியாவில் போர் ஒத்திகை ஆரம்பம்

தென்கொரியாவில் போர் ஒத்திகைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடகொரியாவின் அணுவாயுதத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிகளை அடுத்தே தென்கொரியாவின் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

போர் விமானங்கள் மற்றும் போல்ஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, வடகொரியாவின் அச்சமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்க நேசப்படைகளின் கடும் நடவடிக்கையை வடகொரியா எதிர்கொள்ள வேண்டியேற்படுமென அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதேவேளை கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆராய இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு