இந்தியப் பிரதமர் – சீன ஜனாதிபதி சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின்னுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

சீனாவில் நடைபெறும் ப்ரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு விஜயம் செய்துள்ளார். இந்த மாநாட்டில் வைத்து பாகிஸ்தானில் செயற்படும் லஸ்கர் ஈ தொய்பா, ஜேஸ் ஈ மொஹமட் மற்றும் ஹக்கானி வலயமைப்பு என்பன தீவிரவாத அமைப்புகள் என்பதை ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.

இந்த அமைப்புகளை ஐக்கிய நாடுகளின் தீவிரவாதிகள் பட்டியலில் இணைப்பதற்கு சீனாவே தடையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வருவதனால், தற்போது ப்ரிக்ஸ் நாடுகளின் இந்த அறிவிப்பு, சீனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதுடன், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையும் தொடர்ந்து நிலவுகின்ற சூழலில் இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு