மழையுடனான காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் மலையகப் பகுதிகள் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்கள் மண் மேடு சரிந்து விழல், கற்பாறைகள் விழுதல் போன்றவற்றை கண்டால் உடனடியாக அந்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளதுடன், கங்கைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெள்ளநிலை தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நிலவுகின்ற காலநிலை சீர்கேடு குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு