ஸ்ரீ.மு.க பொதுச் செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான ஆவணங்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளராக பதவி வகித்த மன்சூர் ஏ.காதர் ஆகியோரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்ட நிலையில், சட்டப்படியான இந்த நியமனத்தை தாம் அங்கீகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கடந்த 13 வருடங்களாக கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த அதேவேளை சர்வ கட்சி மாநாடுகள் மற்றும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான உயர்மட்ட கூட்டங்களில் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தியபோது கட்சியின் முதலாவது இணைப்பு செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு