வித்தியா வழக்கிற்கு விரைவில் முடிவுரை

வித்தியா படுகொலை வழக்கின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. கடந்த ஜுன் 28ஆம் திகதி வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் பிரசன்னமான பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுவிட்சர்லாந்திலுள்ள நிறுவனமொன்றுக்கு காணொளியை விற்பனை செய்வதற்காக புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அறிவித்ததுடன், இந்தக் கொலையின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தும் காட்சிகளை நேரடியாக பதிவு செய்து, சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகபதில் சட்டமா அதிபர் தெரிவித்திருந்ததுடன், இதற்காக அந்நாட்டிலுள்ள நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு தரப்பினரதும் சாட்சியப் பதிவு மேல் நீதிமன்றத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு