சட்டம் தொடர்பில் உயரிய செயற்பாடு அவசியம்

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை உயரிய தன்மையில் இருக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் 151ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இலங்கையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதானது, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஜேர்மனி முதலான நாடுகளில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்குச் சமாந்தரமாக இருக்க வேண்டும் எனவும், முன்னொரு காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை இருந்த போதிலும், பின்னர் அது இல்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முழுமையாக தடுப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு