உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் ஊடாக 45 பில்லியன் வருமானம் எதிர்பார்ப்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் மூலம், 45 பில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், வருமான வரி அறவீட்டு முறைகளில் பல்வேறு மாற்றங்களுடன் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வரவுள்ள இந்த சட்டமூலத்தின் முதற்கட்டம் அடுத்த மாதம் 30ஆம் திகதி அமுலாக்கப்படுவதுடன், அதன் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்குவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு