மழையால் தீர்மானத்தை மாற்றிய ஐ.தே.க

நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவை தற்காலிகமாக பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 10ஆம் திகதி இரத்தினபுரி சீவலி மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இரத்தினபுரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் நிகழ்வை பிற்போடுவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியின் ஆண்டு நிறைவு விழா நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு