ஆஸி. உயர்ஸ்தானிகர், பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று இராணுவ தலைமையகத்தில் சந்தித்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இவர்கள் இருவருக்குமிடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும் உடன் கலந்துகொண்டார் எனவும் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, இலங்கைக்கான பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ்.அஸ்லாம் பேர்விஸ் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்ததுடன், புதிய கடற்படைத் தளபதி வைஸ் அடமிரல் ட்ரவிஸ் சின்னையாவையும் கடற்படை தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரண்டு வருடங்களாக இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் கடமைகளையாற்றி மீண்டும் பங்களாதேஷிற்கு செல்லும் நிலையில் இவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு