தற்போதைய சூழலை வடகிழக்கு மக்கள் தவறவிடக் கூடாது – இராதாகிருஷ்ணன்

இனப்பிரச்சினைக்கான சரியான தீர்வினை பெற்றுக்கொள்ள இந்த நல்லாட்சியே சரியான சந்தர்ப்பம் இதை வடகிழக்கு தமிழ் தலைவர்கள் நழுவ விடக்கூடாதென கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கான வகுப்பறை கட்டிடத் தொகுதி, அதிபருக்கான விடுதி திறப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இந்த நாட்டில் 30 வருட கொடூர யுத்தம் நடைபெற்றதால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழக்கவும் சொத்துகளை இழக்கவும் நேரிட்டு உள்ளதனால், நாட்டின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது நமது நாடு மட்டுமல்ல எதிர்கால சமுதாயமும் பல பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும், இது தொடர்ந்து செல்லுமானால் எமது சமுதாயத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும் என்ற நிலையில், இந்த இனப் பிரச்சினைக்கு ஒரு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் முனைவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு தமிழ் தலைவர்கள் உட்பட ஏனைய தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு உரிய தீர்வினை பெற்றுக்கொள்ள ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதுடன், தீர்வுத் திட்டத்தை உடனடியாக வழங்குவதற்கும் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு