மண்சரிவு தொடர்பில் கள ஆய்வு

நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயமுள்ள 15,000 இடங்கள் தொடர்பான கள ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான தள வரைபடம் தற்போது தயார் செய்யப்படுவதாக நிறுவகத்தின் மண்சரிவு எச்சரிக்கை முகாமைத்துவ பிரிவின் பதில் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு அபாய வலயங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும், மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் மண்சரிவு அபாயம் காணப்படக் கூடிய பகுதிகளில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு