20ஆவது திருத்தம் 20ஆம் திகதி விவாதத்திற்கு

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான 20ஆவது திருத்தம் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற அறிக்கை எதிர்வரும் வாரத்தில் கிடைக்கும் எனவும், இதற்கமைய குறித்த சட்டமூலம் எதிர்வரும் 20ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு