ஒக்டோபரில் உணவு உற்பத்தித் தேசிய நிகழ்ச்சித் திட்டம்

நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ள உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெறுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதனை மகாவலி விவசாய சமூகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து விவசாய சமூகத்தினதும் பங்களிப்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக, பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற மகாவலி விவசாய சமூகத்தினரின் பிள்ளைகளின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொணரும் வருடாந்த மகாவலி விளையாட்டு விழவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மகாவலி விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளின் திறமைகளை இந்த போட்டிகளுடன் மட்டுப்படுத்திவிடாது தொடர்ச்சியாக அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வளங்களை வழங்குவது அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு