இலங்கைக்கான தூதுவர்கள் நியமனக் கடிதங்கள் கையளிப்பு (Photos)

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.

எஸ்டோனியா குடியரசு, பெரு குடியரசு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களே ஜனாதிபதியை சந்தித்து நியமனக் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.

நட்புறவுள்ள நாடுகளுக்கு இடையே பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதன் ஊடாக நட்புறவை மேலும் பலப்படுத்த முடியும் எனவும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்களென தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு