நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

மழையுடனான வானிலையை அடுத்து, மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46 வீதமாக அதிகரித்துள்ளது.

லக்ஷபான மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்கள் தற்போது வான்மட்டத்தை எட்டியுள்ளதாகவும், காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 82.2 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 83.7 வீதமாகவும், கொத்மலை நீர்தேக்கத்தில் 55.5 வீதமாகவும், விக்டோரியா மற்றும் ரந்தனிகல ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 25 வீதமாகக் காணப்படுவதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுபிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாளாந்த மின்நுகர்வில் 65 வீதம் அனல் மின் உற்பத்தி நிலையத்தினூடாகவே தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளப்படும் அதேவேளை சூரிய சக்தியூடாக 05 வீத மின் உற்பத்தி நாளாந்த நுகர்விற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு