இவ்வாண்டில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் டெங்கினால் பாதிப்பு

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையில் டெங்கு நோயினால் 360 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சும், தொற்றுநோய் தடுப்புப் பிரிவும் அறிவித்துள்ளன.

இந்த காலப்பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 407 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, டெங்கு நோய் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, புத்தளம், இரத்தினபுரி, காலி, மாத்தறை, கொழும்பு, கேகாலை, கம்பஹா, குருணாகலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் டெங்கு அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் டெங்கு பரவல் குறித்து மிகவும் அவதானமாக இருப்பதுடன், வீட்டுச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு