வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடை

வடகொரியாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடையை விதிக்கும் யோசனை, ஐக்கிய நாடுகளில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் வடகொரியா தமது ஆறாவதும், மிகப்பெரியதுமான அணு குண்டை சோதனை செய்திருந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பொருளாதார தடை வரைவு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்குள்ளாக்கப்பட்ட போது, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 15 அங்கத்துவ நாடுகளும் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

இதற்கமைவாக, நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், வடகொரியாவின் நிலக்கரி, கடலுணவு ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு