தொடரும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

மாத்தளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்படுகின்ற மண்சரிவு நிலை தொடர்பில், மக்கள் அவதானமாக இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குகுலே கங்கையின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், புலத்சிங்கள, அஹலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரதீப் கொடுப்பிலி அறிவுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு