வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

காணாமற்போனோர் அலுவலக செயற்பாட்டிற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் இந்த வர்த்தமானியில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார்.

இதன்படி இந்த மாதம் 15ஆம் திகதி முதல் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதன் செயற்பாடுகள் கடமைகள் மற்றும் இலக்குகள் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு