நவம்பர் 9இல் பட்ஜெட்

2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 10,11,13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதற்கும் குழுநிலை விவாதத்தை 16ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பினை டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு