தேங்காயின் விலை அதிகரிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தெங்கு செய்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதனால், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தெங்கு உற்பத்தித் துறையை மேம்படுத்த தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், தெங்கு முக்கோண வலயத்தின் புத்தளம், சிலாபம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெங்கு செய்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, பள்ளம, ஆனமடுவ உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, வெளிநாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், தும்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று உள்நாட்டு சந்தையில் தேங்காயின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தலைநகர் கொழும்பில் 80 ரூபா அல்லது 85 ரூபாவிற்கு தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக தெங்கு உற்பத்தி பாதிப்படைதுள்ளமையாலேயே தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு ஆராய்சி நிறுவகத்தின் பணிபாளர் டொக்டர் பிரியந்தி பெர்ணாந்து தெரிவித்ததுடன், புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமை 8 மாதங்களின் பின்னர் ஓரளவில் மாற்றமடையக்கூடுமென எதிர்பார்ப்பதாகவும் தெங்கு ஆராய்சி நிறுவகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு