இராணுவப் பயிற்சிக்கு ஜனாதிபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தினரால் எட்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கடல்காகம்’ போர்ப் பயிற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முப்படையினர் மற்றும் 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவத்தினரின் பங்கேற்புடன் இந்த போர்ப்பயிற்சி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான நிலையில், நேற்று திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற போர்ப்பயிற்சியினை தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாகப் ஜனாதிபதி பார்வையிட்டபோதே அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு