புதிய கட்சி ஆரம்பிக்க நினைப்பவர்கள் ஸ்ரீ.சு.கவிலிருந்து விலக வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு புதிய கட்சி ஆரம்பித்து செயற்படும் தேவை உள்ளவர்கள் கட்சியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திக்கோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரையும் கட்சியில் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர எவரையும் நீக்கும் எண்ணம் இல்லை என்ற போதிலும், வேறு கட்சி ஆரம்பிப்போரை கட்சியில் இருந்து நீக்க நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு