முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் நிலையில், அதில் பங்கேற்க நாளைய தினம் அமெரிக்கா செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு