காணாமற் போனோர் தொடர்பான சர்வதேச பிரகடன அங்கீகரிப்பிற்கான சட்டமூலம் இராணுவத்திற்கு அச்சுறுத்தலானது

காணாமல்போனோர் தொடர்பான சர்வதேச பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அது இராணுவத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளதுடன், குறித்த சட்டமூலம் எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், இலங்கையின் இராணுவம் அல்லது முறைப்பாடுகள் உள்ள அரச அதிகாரிகளை வெளிநாடுகள் கோரினால், அவர்களை அந்த நாட்டிடம் கையளிக்க வேண்டும் என்ற ஒரு ஆபத்தான அத்தியாயம் ஒன்று அந்த சட்டமூலத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சட்டமூலமானது நாடாளுமன்றில் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட நிலையில், அதனை மீண்டும் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு இராணுவத்தினரோ அல்லது அவர்களை வழிநடத்திய அரசியல்வாதிகளோ பாதுகாக்கப்படமாட்டார்கள் எனவும் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு