ஏற்றுமதி வருமானத்தில் திருப்தியில்லை – ஜனாதிபதி கவலை

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி வருமானம் திருப்திகரமானதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன், தேசிய பொருளாதார பேரவையை நிறுவும் போது இவ்விடயம் கருத்தில் எடுக்கப்பட்டதுடன், கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் தேசிய விவசாயத்தை உயர்த்துவதும் அதன் முக்கியமான நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி வருமானம் ஒரு வீத பெறுமானத்தை கொண்டிருப்பதாகவும், எம்மை போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அது திருப்பதிகரமானது அல்லவென ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு