வவுனியா வர்த்தக சங்கத் தலைவருக்குப் பிணை

வவுனியா வர்த்தகர் சங்க தலைவர் ரி.கே.இராசலிங்கம் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிதி கைமாறல் தொடர்பில் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காது, இந்தியாவுக்குச் சென்றிருந்த இவர் கடந்த 30ஆம் திகதி இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

முகவர் மூலம் மேற்குலக நாட்டுக்குச் செல்ல இருந்தவரின் நிதியை இவரின் வங்கி கணக்கில் இடுமாறு முகவர் தெரிவித்திருந்த நிலையில், வெளிநாடு செல்ல இருந்தவர் பணத்தை வைப்பிலிட்டுள்ள போதிலும், முகவர் பணம் வைப்பிலிட்டவரை வெளிநாடு கூட்டிச் செல்லாமையால் பணத்தை வைப்பிலிட்ட ஆதாரங்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமைக்கு அமைவாக, வவுனியா வர்த்தக சங்க தலைவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நீர்கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் நேற்று நிபந்தணைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இது தொடர்பான வழக்கு விசாரணை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு