சர்வதேச ஆய்வொன்றில் இலங்கைக்கு 5ஆவது இடம்

புள்ளி விபரமொன்றில் மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கையே இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஆசிய கடல் வலயத்தில் மத்திய நிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிபர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நாங்கள் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை வீசுவதே, கடற்கரை மாசடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும், 1975ஆம் ஆண்டை விடவும், இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு, தற்போது, நூற்றுக்கு 62.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொலித்தீன் பாவனை தேவையற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டமை மற்றும் பயன்படுத்தப்பட்டமை, முறையற்ற ரீதியில் அகற்றியமை உள்ளிட்ட காரணங்களினால் சுற்றுச்சூழலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், கடற்கரையில் இருக்கின்ற கழிவுகளில் 10 சதவீதமானவை பிரதேசத்தில் இருந்தே அகற்றப்படுவதாகவும், ஏனைய 90 சதவீதமானவை, நாட்டின் உள்பாகங்களில் இருந்து, கங்கைகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலிருந்தும் கடலுக்குள் அடித்து வரப்படுவதுடன், தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாக இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து, இலங்கை கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல்வேறான நிறுவனங்கள், கழிவுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது, அவற்றை கடலுக்குள் கலக்கச் செய்துவிடுகின்றமையால், பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் உள்ளிட்ட வகைகளை தொடர்பில், நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும், பிளாஸ்டிக் கதிரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுசூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும், பாரிய அச்சுறுத்தலானது. அவை தொடர்பில் சமூகத்தில் நல்ல கருத்து இல்லை என்பதுடன், சுற்றாடல் பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை மற்றும் திறமை ஆகியன மேம்படுத்தப்படுத்தும் போதுதான், கடல்வள சுற்றுச்சூழல் மற்றும் கரையோரங்களை பாதுகாக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு