ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இலங்கையில் அடைக்கலம்??

இலங்கை ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிலருக்கு அடைக்கலம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக சில சக்திகள் போலிப் பிரசாரத்தை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம் என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இலங்கை அரசுக்கு இதற்காக பாராட்டுத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மக்களைத் தவறாக வழிநடத்தல், பௌத்த மற்றும் முஸ்லிம் மக்களிடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த ஊடக அறிக்கை விடுக்கப்பட்டிருக்கலாமென முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அமைப்பின் கடிதத் தலைப்பில் தமிழ், அரபு எழுத்துக்கள் பிழையாக உள்ளதாகவும், இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லாத ஓர் இலக்கமாகும் எனவும், குறிப்பிட்டுள்ள முகவரியும் பிழையானது. இதேநேரம் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஊடக அறிக்கை எந்த ஓர் ஊடக நிறுவனத்திற்கும் அனுப்பப்படவில்லை. முகநூல்களில் வெளியாகியுள்ள இந்த தகவல் முற்றிலும் பிழையானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எவருக்கும் புகலிடமளிக்கப்படாத நிலையிலேயே விசமத்தனமான நோக்கில் இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு