வெளிநாட்டவர்கள் நால்வர் கைது

பண்டாரவளை, கோவிலுக்கருகில் விஸா மற்றும் கடவுச்சீட்டு இல்லாமலிருந்த 04 இந்தியர்களை பண்டாரவளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சந்தேக நபர்கள் கோவிலுக்கு அருகில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 11.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சந்தேக நபர்கள் நால்வரும் 24, 25, 29, 53 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு