ஆங் சாங் சூகிக்கு ஐ.நா செயலாளரின் இறுதி வாய்ப்பு

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த மியன்மாரின் மக்கள் தலைவர் ஆங் சான் சூகிக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி ரோஹிங்கிய தீவிரவாதிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மியன்மாரின் ரக்ஹெய்ன் பிராந்தியத்தில் மியன்மார் இராணுவத்தினர் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில், இலட்சக்கணக்கான ரோஹிங்கியர்கள் மியன்மாரை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் நம்பகத்தன்மை நிறைந்த பல தரவுகள் சர்வதேச பொதுநல அமைப்புக்களால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மியன்மாரில் இடம்பெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு மியன்மாரின் மக்கள் தலைவரான ஆங் சாங் சூகியிடம் தொடர்ச்சியாக கோரிவந்த போதிலும், இந்த கோரிக்கைக்கு ஆங் சாங் சூகி சார்பில் எந்த பதில் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டேரஸ், ஆங் சாங் சூகிக்கான இந்த இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு