சரண குணவர்த்தனவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தன எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இம்மாதம் 4ஆம் திகதி இவர் கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அபிவிருத்தி லொத்தர் சபைக்குரிய கெப் ரக வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அன்றைய தினம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில், முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு